இந்தியாவிலிருந்து எடுக்கப்படும் முதல் கமர்ஷியல் ஆங்கிலப்படம்

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர். இப்படம் தமிழிலும், ஆங்கிலத்திலும் நேரடியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவில் இருந்து எடுக்கப்படும் முதல் கமர்ஷியல் ஆங்கில படம். இதை தயாரித்து இயக்கியுள்ளார் ஜெ.ராஜேஷ் கண்ணா. இவர் சன் தொலைக்காட்சியில் நடிகர் விஷாலை வைத்து ‘நாம் ஒருவர்’ என்னும் நிகழ்ச்சியை இயக்கினார். வினோத் மோகன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். “கேங் லீடர்” என்னும் தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாகவும் மற்றும் “டாக்டர்” என்னும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடித்த பிரியங்கா மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவே அவருக்கு முதல் படமாகும்.

ஜி.வி பிரகாஷ் தமிழில் தயாரிக்கப்பட்ட “மாயன்” படத்தில் ஒரு பாடலை பாடவிருக்கிறார். சிம்பு மற்றும் அருண்ராஜா காமராஜூம் ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ‘பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் இந்தியா’ மற்றும் ‘ஜி. வி.கே. எம் எலிபண்ட் பிக்சர்ஸ் மலேஷியா’ இணைந்து தயாரித்துள்ளது. காணேஷ் மோகன சுந்தரம் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவர்.

Leave a Response