கபடி வீராங்கணையாக வாழ்ந்திருக்கும் கங்கனா ரணாவத்

2010 இல் இந்திய கபடி அணியின் கேப்டனாக விளையாடிய ஜெயா நிகாம் பற்றிய கதை இது. ஜெயா திருமணமானவுடன் தன் லட்சியத்தை கைவிட்டு கணவர், குழந்தை என குடும்பத்தை கவனிக்கிறாள். ஆனாலும், அவள் அடி மனதில் கபடி விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. கனவில் கபடி ஆடுவது போல் தூக்கத்தில் கணவனை எட்டி உதைக்கிறாள்.

அவளுடைய குடும்ப வாழ்க்கை சலிப்பு தட்ட மீண்டும் கபடியில் சேரவேண்டும் என்று நினைக்கிறாள். தன் 32 வது வயதில் குடும்பத்தாரின் ஒத்துழைப்போடு கபடியில் நுழைகிறாள். தடைகளை முறியடித்து தன் லட்சியத்தை எப்படி சாதிக்கிறாள் என்பதை சொல்கிறது “பங்கா”.

கபடி விளையாட்டை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள “பங்கா” படத்தில் நடிப்பதற்காக கங்கனா ரனாவத் கடுமையாக கபடி பயிற்சி மேற்கொண்டு நடித்துள்ளார். இவருடன் ஜஸ்ஸி கில், நீனா குப்தா, பங்கஜ் திரிபாதி, ரிச்சா சத்தா, யோக்யா பாஷின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

“ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்” நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, சங்கர் எஷான் லாய் குழு இசையமைக்கிறது. ஜே ஐ பட்டேல் ஒளிப்பதிவு செய்கிறார்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் கபடி ஆர்வத்தால் அவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் நடக்கின்றன என்பதை சொல்லும் படம் .

இந்தப் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Leave a Response