மலேஷியா நடிகர் நடிப்பில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகும் மாயன்

சிவனையும், மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சி அமைப்புகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் “மாயன்”. இப்படத்தை சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் ‘சன் நாம் ஒருவர்’ என்று விஷால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ளார். மலேஷிய நடிகர் வினோத் மோகன் இதில் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தமிழில் பிந்துமாதவியும் நடித்துள்ளனர். சிறப்பு பாடல் காட்சிக்காக பியா பஜ்பையும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளார். மற்றும் பிரபல நடிகர்களான ஜான் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், தெறி தீனா , ராஜ சிம்மன், கஞ்சா கருப்பு, ஸ்ரீ ரஞ்ஜினி அகியோரும் நடித்துள்ளனர்.

மாயனுக்காகப் பாடிய சிம்பு :
இப்படத்தின் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். அந்த Single track விரைவில் வெளிவரும் என்று தயாரிப்பு தரப்பில் கூறியுள்ளனர். இப்படத்தை இந்தியாவின் ‘FOX & CROW STUDIOS’ நிறுவனமும், மலேசியாவின் டத்தோ படுக்கா ஸ்ரீ டாக்டர். மோகன சுந்தரத்தின் ‘GVKM ELEPHANT PICTURES’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. டத்தோ காணேஷ் மோகன சுந்தரம் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார்.
.

Leave a Response