தமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா?

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வரும் தமிழ் சினிமா விளம்பரங்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட படம் ஆஹா…ஓஹோ என பிரச்சார்க்ம் செய்கிறது. பிறகு வினியோகஸ்தர்களையும், திரையரங்கு நண்பர்களையும் விசாரித்தால் படத்திற்கு 10 பேர், 20 பேர், 35 பேர் தான் ஆடியன்ஸ் வருகிறார்கள் என்கிறார்கள். சில நேரங்களில் புதிய படங்களின் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. காரணம் என்னவென்றால் படத்தின் காட்சிக்கு 10 பேருக்கும் குறைவான ஆடியன்ஸ் தான் வந்தார்கள், எனவே காட்சி ரத்து செய்யப்பட்டது என்று தெரிவிக்கின்றனர்.

இப்படிப்பட்ட நேரத்தில் தான் தீயாக வேலை செய்கிறார்கள் CTC, MTC, PTC, XYZ, ABC என்ற சமூக வலைதள விளம்பர ஏஜெண்டுகள். பரிமாண வளர்ச்சியில் அச்சு ஊடகம், பிறகு வானொலி, தொலைக்காட்சி, இணையதளம், சமூக வலைத்தளமான ட்விட்டர், பேஸ்புக் என வந்து கொண்டே தான் இருக்கின்றன. இருப்பினும் இன்றும் அச்சு ஊடகத்திற்கான வரவேற்பு நிலையாக உள்ளது.

அடுத்த பரிமாண வளர்ச்சியில் தொலைக்காட்சி தன்னை நிலைநிறுத்தி கொண்டது. பின் நாட்களில் வந்த இணையதளம் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத்திற்கு சவாலாகவே வந்தது. இணையதளத்தில் அச்சு ஊடகத்தில் படிக்க கூடிய செய்திகளும் பபிக்க இயலும், அதே போல் தொலைக்காட்சிகளில் வரக்கூடிய வீடியோக்களையும் இணையதளத்தில் பார்க்க கூடிய வசதிகள் வந்தன. எனவே ஊடகத்துறையில் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத்திற்கு இணையாக இணையதளம் தற்போது கோலோச்சி வருகிறது. இணையதள ஊடகம் என்பது தனியான ஒரு தளத்தில் இயங்கக்கூடிய ஒன்று. ஆனால் தற்போது கொண்டாடப்படும் சமூக வலைத்தளமான ட்விட்டர், பேஸ்புக் போன்றவைகள் வேறு ஒருவருடைய தளத்தில் தனி நபர்கள் இலவசமாக பயணிக்கும் ஒரு தளம் மட்டுமே. நாளை இந்த சமூக வலைத்தளங்களை அதன் முதலாளிகள் இழுத்து முடிவிட்டால் அதில் செய்தி சொல்கிறோம் என்ற பெயரில் ஓசியில் பயணம் செய்தவர்கள் நிலை அம்போகதி தான். இந்த சமூக வலைதளங்களில் வரக்கூடிய தகவல்கள் முற்றிலும் உறுதியான தகவல்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

இப்படி இருக்க இன்றைய சினிமாவில் தற்போது விளம்பரத்தில் கோலோச்சி கொண்டிருப்பது நாம் மேலே குறிப்பிட்டுள்ள CTC, MTC, PTC, XYZ, ABC என்ற சமூக வலைதள விளம்பர ஏஜெண்டுகள் தான். இவர்கள் ஒரு படம் பூஜை போட்ட உடன் அல்லது பூஜை போடும் முன்பே அந்த தயாரிப்பாளர், இயக்குனர் அல்லது நடிகர்கள், நடிகைகளை அல்லது படத்தின் பி.ஆர்.ஓ’வை அணுகுவது. அவர்களிடம் தன்னுடைய விளம்பர கம்பெனி ஒரு பெரிய ஜாம்பவான் கம்பெனி போன்ற ஒரு தோற்றத்தை காண்பிக்க வேண்டியது. தங்களிடம் ட்விட்டரில் பதிவிடும் நபர்கள் 40 முதல் 60 பேர் வரை உள்ளனர். அவர்கள் ஒரு படத்தை பற்றி ஒரு பதிவு போட்டால் அது ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் ஆகி படத்தின் விளம்பரம் ஆஹா..ஓஹோ என பேசப்படும் என்று கதையை அளந்து விடுவார்கள், அதையும் பணம் போட்ட தயாரிப்பாளர்கள் நம்பி ஏமாந்தது தான் மிச்சம். ஒரு பத்திரிகை தர்மம் என்பது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நடுநிலையான உண்மையை சொல்வது தான். இருப்பினும் இரு பொருளுக்கோ அல்லது ஒரு திரைப்படத்திற்கோ விளம்பரம் என்று வாங்கிவிட்டால், அந்த பொருளின், படத்தின் பெருமையை செய்தியாக பறை சாற்றலாம். ஆனால் அந்த ஒரு பொருளில் ஏதாவது கேடு இருப்பின் அதை பற்றி மக்களுக்கு எடுத்து சொல்லுவது ஒவ்வொரு ஊடகத்தின் கடமையும் கூட. அதை போல் தான் ஒரு திரைப்படத்தில் இருக்கும் ப்ளஸ்ஸையும் மைனஸையும் சொல்லுவது ஒரு ஊடகத்தின் கடமை. விளம்பரம் வாங்கி இந்த ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் பதிவிடுபவர்கள் ஒரு படத்தின் ப்ளஸ்ஸை சொல்லுவதுடன், படத்தின் மைனஸையும் ப்ளஸ்ஸாக விளம்பரம் படுத்துவதே இவர்கள் பணி. இந்த சமூக வலைதள விளம்பரம் ஆஹா…ஓஹோ என்று ட்ரெண்டாவது உண்மை தான், அப்படி இருப்பின் படம் ஆஹா…ஓஹோ என்று ஓட வேண்டுமே, லாபம் ஈட்ட வேண்டுமே. அது தான் கிடையாது. சமூக வலைதள விளம்பர ஏஜென்ட் என்ற பெயரில் சில வருடங்களாக சில கேப்மாரி ஏஜெண்டுகள் வலம் வருகிறார்கள். இந்த கேப்மாரி ஏஜெண்டுகள் சமீபத்தில் வெளிவந்த ‘பலூன்’, ‘சைரா நரசிம்மா ரெட்டி’, ‘சிந்துபாத்’, ‘பெட்ரோமேக்ஸ்’, ‘சாஹா’, ‘இருட்டு’ என இன்னும் சில படங்கள் என ஒவ்வொரு படங்களுக்கும் பல லட்சம் ரூபாய் விளம்பர செலவுக்காக வாங்கியது CTC நிறுவனம், படம் வெற்றி பெற்றதா என்றால்…இல்லை என்பதே உண்மை. என்ன தான் சமூக வலைதளத்தில் ஒரு படத்தை கூட்டாக சேர்ந்து ஒரே எழுத்து வடிவத்தில் ஒரு படத்தை ஆஹா…ஓஹோ என்று விளம்பர படுத்தி எழுதினாலும், ஆடியன்ஸ் படத்தை பார்த்துவிட்டு வெளியில் சொன்னால் தான் அந்த படம் வெற்றி பெறும் என்ற அடிப்படை விஷயத்தை தெரியாமல் பயணிக்கின்றனர் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் நடிகையர்கள்.

இந்த வாரம் ரிலீஸாகவிற்கும் ஜெய் நடித்து நடிகர் விஜய்’யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ள ‘கேப்மாரி’ படத்தின் விளம்பர பொறுப்பையும் CTC என்ற ஒரு விளம்பர கம்பெனிக்கு தான் வழங்கப்பட்டுள்ளதாம். இந்த நிறுவனம் தற்போது அட்வான்ஸாக ரூபாய் ஆறு லட்சம் பெற்றுள்ளதாம். அவர்கள் அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்துள்ள லிஸ்டை பார்த்தால் அதில் 60 சமூக வலைதள விளம்பர கணக்குகள் பெயர்கள் இருந்துள்ளன. அதில் சுமார் 10 மட்டுமே உண்மையான நேர்த்தியான பதிவுகளை ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் பதிவிடுபவர்களாம். மற்றவர்கள் அனைவரும் டுபாகூர்களாம். அந்த லிஸ்டில் இணையதள ஊடகங்கள் என்று ஒரு லிஸ்டையும் அந்த கேப்மாரி தயாரிப்பு நிறுவனத்திற்கு CTC கம்பெனி கொடுத்துள்ளது. அந்த லிஸ்டில் சுமார் ஐந்து இணையதள ஊடகங்கள் தரமானவையாம், மற்றவை டுபாக்கூர் அதாவது கட், காப்பி, பேஸ்ட் செய்யும் இணையதளங்களாம்.

இப்படிப்பட்ட கேப்மாரி கம்பெனிகளிடம் தமிழ் திரைப்படத்தின் விளம்பர பொறுப்பு கொடுக்கப்பட்டல், படங்கள் எப்படி வெற்றி பெறும் என்பது தான் பெருத்த சந்தேகம். இப்படிப்பட்ட கேப்மாரி விளம்பர ஏஜெண்டுகளை ஆஹா…ஓஹோ என்று சொல்லி ஊக்கி வைப்பது சில சினிமா பி.ஆர்.ஓ’கள் தான் என்பது ஒரு கசப்பான விஷயம். இத்தகைய சூழலிலும் விளம்பர பணியில் சற்று கவனமாக இருந்து பயணிப்பது கே.ஈ.ஞானவேல்ராஜா’வின் ஸ்டுடியோ க்ரீன், எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ், தனஞ்செயனின் போப்தா போன்ற ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே. இதற்கான காரணம் இந்த நிறுவனங்கள் விளம்பரங்களை ஏஜெண்டுகளிடம் கொடுப்பதில்லை அவர்களே விளம்பர பணியினை நிர்வகிக்கின்றனர். ஏதாவது கட்டத்தில் விளம்பரங்களை ஏஜெண்டுகளிடம் நம்பி கொடுத்தாலும், அந்த பனி சிறக்க நடக்கிறதா என்பதை கண்காணிப்பதோடு, டுபாக்கூர் தளங்கள் எது எனஆராய்ந்து நீக்கிவிடுகிறார்கள். இத்தகைய கேப்மாரிகள் விளம்பர ஏஜெண்டுகளாக பயணிக்கும் சினிமா துறையில், நேர்மையாக பயணிக்கும் ஒரு சில விளம்பர ஏஜெண்டுகளினால் சில தயாரிப்பாளர்கள் வெற்றி பயணம் மேற்கொள்கிறார்கள் என்பதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா? கேப்மாரி விளம்பர ஏஜெண்டுகளிடம் சற்று கவனமாக இருங்கள் சினிமா துறையினரே!

Leave a Response