சிபிராஜ் நடிக்கும் படத்தில் டப்பிங் பணிகள் தொடங்கியது

நடிகர் சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் “வால்டர்” படத்தின் டப்பிங் தொடங்கப்பட்டுள்ளது. ஷ்ரின் காஞ்ச்வாலா நாயகியாக இப்படத்தில் நடித்துள்ளார். U. அன்பரசன் இயக்கத்தில் தொடக்கம் முதல் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது இப்படம். தமிழர் வரலாற்றில், ஆன்மீக புகழ் கொண்ட கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மிக வித்தியாசமான திரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தின் ஷூட்டிங் முழுதும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் தற்போது ஆரம்பித்து நடைபெற்று வருகிறது

11:11 Production சார்பில் இப்படத்தினை தயாரிக்கும் ஸ்ருதி திலக் கூறியதாவது,

“இப்படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட மிக விரைவாக, நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது. இயக்குநர் அன்பரசன் திரைக்கதையை சொன்னது போலவே எந்த மாற்றமும் இல்லாமல் அழகாக படம் பிடித்துள்ளார். படத்தின் கதையை கேட்டு அதிலுள்ள ஆக்‌ஷன் காட்சிகளின் காரணமாக ஷூட்டிங் தேதிகள் சில நாட்கள் அதிகரிக்க வேண்டியிருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அயராது உழைப்பில் எந்த ஒரு தாமதமும் இன்றி திட்டமிட்டபடி ஷூட்டிங் முடிக்கப்பட்டது. இதற்கு இந்த அற்புதமான படக்குழுவே காரணம். படத்தின் டப்பிங் பணிகளை இப்போதே துவங்கியுள்ளது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளையும், தீவிரமாக முடித்து படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வருவோம்” என்றார்.

11:11 Production சார்பில் ஸ்ருதி திலக் “வால்டர்” படத்தினை தயாரிக்கிறார். பரபரப்பான திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் சிபிராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ஷ்ரின் காஞ்ச்வாலா நாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, ஷனம் ஷெட்டி, ரித்விகா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

Leave a Response