சர்ச்சை இயக்குநரின் தயாரிப்பில் சமூக அக்கறை பற்றிய திரைப்படம்…

2011ம் ஆண்டு தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் ‘டேம் 999’. இந்த திரைப்படம் முல்லை பெரியார் ஆணை பற்றிய படமாகும். இப்படத்தில் இடம்பெற்ற சில வசனங்களும் காட்சிகளும் தமிழக மக்களுக்கு எதிர்மறையான கருத்துக்கள் கொண்டுள்ளதாக இருக்கிறது என்று சொல்லப்பட்டு, இப்படம் திரையரங்குகளில் சரியாக வெளியாகாமல் சர்ச்சையில் சிக்கியது. இந்த ‘டேம் 999’ திரைப்படத்தை இயக்கி தயாரித்தவர் அரபு நாட்டில் வசிக்கும் சோஹன் ராய் என்ற இந்தியர் ஆவார். தணிக்கை செய்யப்பட அப்படம், வெளியிட தடை இருக்க கூடாது என படக்குழுவினர் நீதிமன்றத்தை நாடியது வேறு கதை. இப்படிப்பட்ட ஒரு படத்தை இயக்கிய சோஹன் ராய் தற்போது ‘கானல்நீர்’ என்னும் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் எம்.பத்மகுமார் இயக்கியுள்ளார். சி.எஸ்.ஆர் திரைப்படமான கானல்நீர் தமிழகத்தில் செப்டம்பர் 13 ம் தேதி வெளியாகிறது.

ஒரு பரபரப்பான நகரின் மத்தியில் வாழும், வீடில்லாத பெண் மற்றும் அவரது குழந்தையின் போராட்டமான வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த திரைப்படம் ஏற்கனவே சமூகத்தின் அனைத்து தரப்பைச்சேர்ந்த முன்னணி மனிதர்களை கவந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

திரைப்படத்தின் நாயகியாக பிரியங்கா நாயர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் காளை, ஹரீஷ் பெரேடி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி.எஸ்.சுரேஷ் பாபு திரைக்கதை எழுத, எம்.பத்மநாபன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் சோகன் ராய் அவர்களின் தயாரிப்பில், சி.எஸ்.ஆர் (நிறுவன சமூக பொறுப்புணர்வு) பிரிவில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதல் நன்கொடை திரைப்படமாகும்.

இப்படம் பற்றி இயக்குனர் எம்.பத்மநாபன் நம்மிடம் தெரிவித்ததாவது, “இந்த ‘கானல்நீர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த திரைப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு போட்டியிடுகிறது.

இத்திரைப்படத்தின் மூலம் கிடைகும் லாபம் அனைத்தும் நிலமற்றவர்கள் மறுவாழ்வுக்கு மற்றும் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இந்த இரண்டு கருப்பொருள்களும் திரைப்படத்தில் பிரதானமாக கையாளப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் பாலம் ஒன்றின் கீழ் வசிக்க நேர்ந்த குடும்பம் பற்றி பிரபல நாளிதழில் வெளியான செய்திக்கட்டுரையை அடிப்படையாக கொண்டு கானல்நீர் படம் அமைந்துள்ளது. பெரும்பாலான நிலமில்லாதவர்கள், தங்கள் குடும்ப பெண்களை பாலியல் தாக்குதலில் இருந்து காப்பதற்கான பாதுகாப்பான இடத்தை தேடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பெரும்பாலும் அதிகாரவர்கத்தால் அலட்சியம் செய்ப்படும், நில உரிமை போராட்டம் பற்றியும் இத்திரைப்படம் பேசுகிறது. இந்தியா அதிகாரவர்கத்தின் மந்தமான தன்மை மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவாமல் இருக்கும் அதிகாரவர்த்தின் தன்மை பற்றியும் கானல்நீர் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

முக்கியமாக கானல் நீர், ஒரு குறிக்கோள் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளது. கலை, நேர்த்தி மற்றும் சிறந்த நடிப்பு ஆகிய அம்சங்களை கொண்டுள்ள படமாக விளங்குகிறது.” என சொல்கிறார் படத்தின் இயக்குனர் எம்.பத்மநாபன்.

‘கானல்நீர்’ திரைப்படம் 2018ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியாகி, பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட திரைப்படமாகும். செப்டம்பர் 13ம் தேதி தமிழில் வெளியாகும் இப்படம் இங்கும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response