தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்த மாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன.
லோக்சபா தேர்தல் நடக்க இருந்ததால் எப்போதும் நடப்பதை விட மிக வேகமாக 12ம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்தது. இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
அதில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாட வாரியாக பொறுத்தவரையில் கணிதப் பாடத்தில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாட வாரியான தேர்ச்சி விகிதம் :
கணிதம் : 96.25%
இயற்பியல் : 93.89%
வேதியியல் : 94.88%
உயிரியல் : 96.05%
தாவரவியல் : 89.98%
விலங்கியல் : 89.44%
கணிணி அறிவியல்: 95.27%
வணிகவியல் : 91.23%
கணக்குப்பதிவியல் : 92.41%
வணிகக் கணிதம் : 97.49%
இந்திய கலாசாரம் : 88.73%
அரசியல் அறிவியல்: 88.75%
வரலாறு : 86.59%
பொருளியல் : 92.22%
மனையியல் :93.89%
நர்சிங் :92.57%
புவியியல் :89.41%