சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூர்யா 38’..!

‘என்.ஜி.கே’ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதுப்படத்தை சுதா கோங்கரா இயக்குகிறார். சூர்யாவின் 38-வது படமான இப்படத்துக்கு இன்னும் டைட்டில் அறிவிக்கப்படவில்லை. தற்காலிகமாக ‘சூர்யா 38’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் துவக்க விழா பூஜை நேற்று ஏப்ரல் 7-ம் தேதி நடந்தது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்குபெறுகிறார்கள். படத்தின் இசை ஜி.வி.பிரகாஷ் கையாளுகிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றுகிறார். படத்தொகுப்பிற்கு சதீஷ் சூர்யாவும், உடைகளுக்கு பூர்ணிமா ராமசாமியும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். இணை தயாரிப்பு  ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.

Leave a Response