தமிழகத்தில் எதையும் செய்யாத அதிமுக அரசு, திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்தும் நிறைவேற்றப்படும் – தமிழச்சி தங்கபாண்டியன்..!

தமிழகத்தில் எதையும் செய்யாத அதிமுக அரசு, அனைத்தையும் செய்ததாக கூறி வருவதாக, தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டினார்.

அசோக் நகரில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய தமிழச்சி தங்கபாண்டியன், திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது சென்னை மக்களின் கோரிக்கைகள், திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். எதையும் செய்யாத அதிமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் தமிழச்சி தங்கபாண்டியன் கேட்டுக்கொண்டார்.

மேலும், விளையாட்டுத் திடல், பாதாளச் சாக்கடை உள்ளிட்டவற்றை குப்பம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கேட்டுள்ளார்கள். அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும், திமுக தலைவர் ஸ்டாலினிடம் சொல்லியிருப்பதாகவும் ஆட்சிக்கு வந்தவுடன் பிரச்சனைகள் தீர்க்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மக்கள் பிரச்சனை இருந்து கொண்டே தான் உள்ளது. எந்த பிரச்சனையையும் தீர்க்காமல், இது தான் எங்கள் கோட்டை என்று சொன்னால் கூரைமீது ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி, எங்கோ போனது போல் அர்த்தமாகிவிடும் என விமர்சனம் செய்தார்.

Leave a Response