வசூல் வேட்டையில் “தில்லுக்கு துட்டு-2”..!

நடிகர் சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 படம் தமிழகம் முழுவதும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

2016-ஆம் ஆண்டு ‘லொள்ளு சபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் மற்றும் அஞ்சல் சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தில்லுக்கு துட்டு. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை ராம்பாலாவே இயக்கியுள்ளார்.

இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் நாள் வசூல் சுமாராக இருந்தாலும் படத்தின் பாசிட்டிவ் டாக் அடுத்தடுத்த நாட்களில் வசூலை அதிகரிக்க செய்தது. இந்நிலையில் படம் வெளியாகி இரண்டு வார முடிவில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ 3 கோடி வசூலை கடந்துள்ளது.

அது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சுமார் ரூ 17 கோடி வரை இப்படம் வசூல் செய்து சந்தானம் திரைப்பயணத்தில் அதிக வசூலை கொடுத்துள்ளது.

Leave a Response