கேக் வேண்டாம் – பிறந்தநாளில் புதுமை செய்த நடிகர் ஆரி..!

முன்னணி ஹீரோக்களாக இருக்கும் பலர் சமூகம் பற்றி அவ்வளவாக சிந்திப்பதில்லை.தங்களுடைய பப்ளிசிட்டிக்காக அவ்வப்போது ஸ்டண்ட் அடிக்கும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஹீரோக்களுக்கு மத்தியில் படங்களில் நடிப்பதுடன் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருபவர் ஆரி!

முக்கியமாக இயற்கை விவசாயம் குறித்து பல்வேறு விஷயங்களையும் பரப்புரைகளையும் செய்து வருகிறார். காதலின் உயர்வை சொல்லும் கதையாக உருவாகி வரும் ‘அலேகா’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஆரி!

‘அலேகா’ படத்தின் படப்பிடிப்பு நேற்றைய முன்தினம் கோடம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. அன்றைக்கு ஆரியின் பிறந்த நாள் என்பதால் படக்குழுவினர் பெரிய கேக்கை தயார் செய்திருந்தனர்.

இயற்கை உணவு குறித்து பேசி வரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு கிடையாது என்பதால் கேக் வெட்ட மறுத்ததோடு, படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். உடன் ஐஸ்வர்யா தத்தாவும் இருந்தார்.

ஆரியுடன் இந்த செயலைப் பார்த்து படக்குழுவினர் வியந்து போனார்களாம்.

Leave a Response