ரசிகர்களை வெகுவாக கவர்ந்த “திருமணம்” ட்ரைலர்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சேரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருமணம்.

இந்த படத்தில் சேரனுடன் இணைந்து தம்பி ராமையா, சுகன்யா, தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், எம்.எஸ் பாஸ்கர், பாலா சரவணன், ஜெயப்ரகாஷ், மனோ பாலா என பலரும் போட்டி போட்டு கொண்டு திறைமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் ட்ரைலரை பார்க்கும் போதே நிஜ வாழ்க்கையில் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்ணிற்கு திருமணம் செய்து முடிப்பதற்குள் ஏற்படும் பிரச்னைகளை மிகவும் எதார்த்தமாக பேசும் படமாகவும் குடும்பங்கள் ரசிக்கும் வகையிலும் உருவாகி இருப்பது தெள்ள தெளிவாகிறது.

மேலும் இப்படம் நிச்சயம் சேரனுக்கு மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமையும் என்பது உறுதியாகியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியான வெள்ளையப்பன் முயற்சியால் அவரின் நண்பர் பிரேம் இப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response