சென்னையில் 42-வது புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 4ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 20ம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சியில் 820 அரங்குகளில் 1.5 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த வேண்டுகோளில் கூறப்பட்டிருப்பதாவது:
42 வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் ஆரம்பமாகிவிட்டது, பெற்றோர்களே, குழந்தைகளை அழைத்து செல்லுங்கள். புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டாக்குங்கள். அற்புதமான புத்தகங்கள் கிடைக்கின்றன ‘என்று குறிப்பிட்டுள்ளார்.