இலவச திட்டங்களை வாரி வழங்கி, அரசு மக்களை கையேந்த வைத்து விட்டது – சென்னை ஐகோர்ட் வேதனை..!

மக்களை கையேந்த வைத்து விட்டனர் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளது சென்னை ஐகோர்ட்.

தேர்தல் லாபத்திற்காக இலவச திட்டங்களை வாரி வழங்கி, அரசுகள் மக்களை கையேந்த வைத்து விட்டதாக சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.

ரேசன் அரிசி தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேசன் அரிசி கிடைக்க வேண்டும். ரேசன் கடைகளில் அனைத்து தரப்பினருக்கும் ரேசன் அரிசி தேவையில்லை. பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களும் ரேசன் கடைகளில் இலவச அரிசியை பெற்று வருகின்றனர்.

ரேசன் அரிசிக்காக செலவு செய்த ரூ.2,110 கோடியை உள்கட்டமைப்புக்கு பயன்படுத்தியிருக்கலாம். உள்கட்டமைப்பு பயன்படுத்தியிருந்தால் அனைவரும் பயன்பெற்றிருப்பார்கள். தேர்தல் லாபத்திற்காக இலவச திட்டங்களை வாரி வழங்கி, அரசுகள் மக்களை கையேந்த வைத்து விட்டன.

இவ்வாறு கோர்ட் கூறியுள்ளது.

Leave a Response