திட்டமிட்டபடி ‘உத்தரவு மகாராஜா’ திரையில் வெளியாகும்! தயாரிப்பாளரும், கதாநாயகனுமான உதயா உறுதி…

‘உத்தரவு மகாராஜா’ திரைப்படம் வெளியாகுவதில் சிக்கல் என்ற செய்தியை பற்றி அதன் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான உதயா அவர்களிடம் இது பற்றி விசாரிக்கப்பட்டது.

அப்போது உதயா கூறியதாவது, “படத்தின் மதுரை விநியோக உரிமையை அடமானம் வைத்து மணிவர்மா அவர்கள் குடும்பத்தினரிடம் பணம் கடனாக வாங்கியது உண்மைதான். அந்த பணத்தை நான் செலுத்திதான் வருகிறேன். மணிவர்மா சகோதரர் கார்த்தி அவர்களுடன் தொடர்பில் இருந்துகொண்டு தான் இருக்கிறேன், அவர்கள் பணம் செட்டில் செய்யப்பட்டு தான் வருகிறது.

மணிவர்மா அவர்களுக்கும் அவரருடைய குடும்பத்தாருக்கும் குடும்ப தகராறு இருந்துவருகிறது. அதனால், மணிவர்மா என் படம் வெளிவராமல் தடுப்பதற்கு முயற்சிக்கிறார். இந்த வழக்கு சம்மந்தமாக மணிவர்மாவின் சகோதரர் கார்த்தி மிகவும் வருத்தப்பட்டார். இந்த வழக்கு சம்மந்தமாக கடன் பாக்கி ஏதாவது இருந்தால் அது அனைத்தும் முடிக்கப்பட்டு, ‘உத்தரவு மகாராஜா’ திரைப்படம் திட்டமிட்டபடி நவம்பர் 16, 2018 அன்று வெளியாகவுள்ளது.” இவ்வாறு ‘ஒற்றன் செய்தி’ ஊடகத்திற்கு உதயா தெரிவித்துள்ளார். – ‘ஒற்றன்’ துரை.

Leave a Response