புல்லட்டில் ஏறி பொங்கலுக்கு வரும் ‘விஸ்வாசம்’ வெளியானது செகண்ட் லுக் போஸ்டர்..!

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விஸ்வாசம். ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களுக்குப் பிறகு அஜித் – சிவா காம்போவில் நான்காவது படமாக இது உருவாகியுள்ளது.

பொங்கல் ஸ்பெஷலாக இப்படம் ரிலீஸாக உள்ளது. டி. இமான் இசையமைக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் போஸ்டர், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியானது.

விஸ்வாசம் படம் குறித்த அப்டேட்களை அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே,  #Viswasam #ViswasamThiruvizha என்ற ஹேஷ்டேக்குகள் போட்டு, படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் அவர்கள் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை சத்யஜோதி பிலிம்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. இதில், அஜித் தனக்கென்று தயாரிக்கப்பட்ட பிரத்தேகமான பைக்கில் ஹேப்பியாக வரும்படியாக உள்ளது. பின்னால் திருவிழா போன்று கூட்டமாக மக்கள் மகிழ்ச்சியாக ஆடிப்பாடுவது போன்று இருக்கிறது.

 

Leave a Response