உலக சாதனை படைத்த தளபதியின் ‘சர்கார்’ டீசர்..!

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது.

இதுவரை எந்த தமிழ்ப் பட டீசரும் செய்யாத சாதனையை அடுத்தடுத்து அந்த டீசர் செய்ய ஆரம்பித்தது.

292 நிமிடங்களில் 10 லட்சம் லைக்குகளைப் பெற்று உலக அளவில் குறைந்த நேரத்தில் 10 லட்சம் லைக்குகளைப் பெற்ற உலக சாதனையைப் புரிந்தது. இதற்கு முன் ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது.

தற்போது 1 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளும், 10 லட்சம் லைக்குகளும் ‘சர்கார்’ டீசர் பெற்றுள்ளது.

10 லட்சம் லைக்குகுள் போதாது 20 லட்சம் லைக்குளை நோக்கிப் போக வேண்டும் என விஜய் ரசிகர்கள் அடுத்த சாதனைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Response