சர்கார் படத்துடன் மோதும் வைரமகன்..!

கோபி காந்தி “முதல் மாணவன்” படத்தைத் தொடர்ந்து தனது ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து நடித்துள்ள “வைரமகன்” படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

“வைரமகன்” படம் “அம்மா”வுக்கு பாச மகனான விவசாயத் தொழிலாளிக்கு திருமணத்திற்கு பெண் தேடி அலையும் “அம்மா” ஒரு விபத்தில் சுய நினைவை இழந்து தனக்கு மகன் இருப்பதையே மறந்து பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்து விடுகிறாள்.

அந்த மகன் தனது தாயைத் தேடி பல்வேறு இடங்களுக்கு அலைகிறான்.

அதற்காக ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான். காணாமல் போன தாயை கண்டுபிடித்தானா? காதலியை கரம் பிடித்தானா?என்பதை குடும்பத்துடன் ரசிக்கும் அளவிற்கு சென்டிமென்டாகவும், .

நகைச்சுவையாகவும் கலந்து “வைரமகன்” உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் நான்கு பாடல்கள் இன்றைய காலத்தில் வரிகள் புரியும்படி கருத்து, காதல் மற்றும் தாய்ப்பாசத்தை வலியுறுத்தியும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு பாடல் விவசாயிகளின் கஷ்டத்தையும், பெருமைகளையும் சொல்லும்படி வரிகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அப்பாடலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

“வைரமகன்” படப்பிடிப்பு நாமக்கல், சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. “வைரமகன்” படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்தே பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. நாற்பது நாட்களில் முடிவடைய வேண்டிய படப்பிடிப்பு நூறு நாட்களுக்கு மேல் நடைபெற்றது.

இயற்கைகளும், செயற்கைகளும் பல்வேறு வகையில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் தடை செய்தது.

ஒரு பக்கம் கலைஞர்களும், தொழில் நுட்பகலைஞர்களாலும் பல்வேறு தடைகள் மேலும் படபிடிப்பு நடைபெற்ற பத்து நாட்கள் சாட்சிகளும், டிஜிட்டல் குளறுபடியால் சாட்சிகள் அனைத்தும் அழிந்து விட்டது. இப்படி பல்வேறு வகையிலான இன்னல்களை ஒரு தயாரிப்பாளராக கோபிகாந்தி கஷ்டப்பட்டு “வைரமகன்” படத்தை ஒரு வழியாக நிறைவு செய்து வருகிற தீபாவளிக்கு படத்தை வெளியிடுகிறார்.

“வைரமகன்” படத்தில் கோபிகாந்தியுடன் சுகன்யாஸ்ரீ, சுதா என்ற இரண்டு புது முகங்கள் நடித்துள்ளனர்.

நெல்லை சிவா, போண்டா மணி, விஜய கணேஷ், அப்பு போன்ற காமெடி நடிகர்களும் நடித்துள்ளனர். ராஜுகீர்த்தி எடிட்டிங் செய்துள்ளார். எஸ்.எஸ். சூர்யா இசையமைத்துள்ளார். முருகவேல் இயக்கியுள்ளார். “வைரமகன்” படத்தை கோபி காந்தியே வெளியீடு செய்கிறார்.

தனது ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் மேலும் தான் தயாரித்து நடித்துள்ள “வீரக்கலை” படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பொங்கலுக்கு வெளியிடவும் முடிவு செய்துள்ளார்.

கோபிகாந்தி மேலும் அடுத்த ஆண்டு இரண்டு படங்களை தயாரித்து நடிக்க உள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நேரத்தில் தனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் தனது மக்கள் சேவை இயக்கத்தினருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் “வைரமகன்” தீபாவளி அன்றே டி.வி.டியும் இணையதளத்திலும், தொலைக்காட்சியிலும் வெளியிடுவதாகவும் கோபி காந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Response