மத்திய அரசு தமிழை அழிக்க முற்படுகிறது : திமுக பொதுக்குழு கூட்டத்தில், தயாநிதி மாறன் குற்றச்சாட்டு..!

மத்திய அரசு தமிழை அழிக்க முற்படுகிறது என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்ற நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் தயாநிதி மாறன் பேசியதாவது:

1967-68களிலே எவ்வாறு திமுக தலைமைக்கு சிக்கல்கள் இருந்தனவோ, அதே போன்ற சிக்கல்கள் இப்போதும் எழுந்துள்ளன. மத்தியில் உள்ள அரசு அதே இந்தித் திணிப்பை, இந்தி ஆதிக்கத்தை கொண்டுவர இப்போதும் முயல்கிறது.

கல்விக் கொள்கையில் எவ்வாறு அப்போது மத்திய அரசு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி என்ற கொள்கையை கையில் எடுத்தார்களோ, அதேபோல இன்று ஆட்சியாளர்களும் செயல்படுகிறார்கள்.

அதுமட்டுமின்றி நமது தமிழ் மொழியை அழிக்க முயற்சிக்கிறார்கள். தலைவர் அவர்களே, நீங்கள் அதில் வெற்றி பெற்று ஜெயித்துக் காட்ட வேண்டும். காரணம். புலிக்கு பிறந்தது பூனையாகாது, கலைஞருக்கு பிறந்த தளபதி வெற்றி வெற்றி வெற்றி மட்டுமே பெறுவார். துரைமுருகனின், பாடு பெரும்பாடு. இதற்கு முன்பு ஸ்டாலின் பொருளாளராக இருந்தார். அவர் கட்சிக்காக எவ்வளவு நிதி வசூல் செய்தார்? அதற்காக எப்படி ஓடி ஓடி உழைத்தார்? எனவே துறைமுருகனும் அவ்வாறு ஓடி ஓடி உழைக்க வேண்டும். கண்டிப்பாக செய்வீர்கள் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன்.

இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்தார்.

Leave a Response