சொந்த வண்டியே காசு கொடுத்தா தான் கிடைக்கும்!

varusanadu

மாயி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ஆர்.செந்தில்குமார் தயாரிக்கும் படத்திற்கு ‘வருசநாடு’ என்று பெயரிட்டுள்ளனர். குமரன் கதாநயாகனாக நடிக்கிறார். கதாநயாகியாக சிருஷ்டிடாங்கே நடிக்கிறார்.

சிங்கமுத்து, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜ்கபூர், சந்தானபாரதி, ஸ்டில்ஸ்குமார், சம்பத்ராம், பாரதிகண்ணன், க.த.கா.திருமாவளவன், சிஐடிசகுந்தாலா, யுவராணி, மற்றும் ஸ்ரீகவி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – டி.பாஸ்கர். இசை – யத்தீஷ்மகாதேவ். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சூரியபிரகாஷ்

இப்படத்தின் படப்பிடிப்புதிண்டுக்கல், பெரியகுளம், வத்தலகுண்டு போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படத்தின் கதை சுவாரசியமான, சோகமான விஷயங்களை உள்ளடக்கியது. இப்படத்திற்கான சண்டைக்காட்சி ஒன்றை திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிரடியாக படமாக்கியுள்ளோம்.

அந்த ஏரியாவில் யாருமே தங்களது  வாகனங்கள் எதை நிறுத்திவிட்டுச் சென்றாலும் அப்பச்சியின் ஆட்கள் அதை திருடிக்கொண்டு வந்துவிடுவார்கள். சம்பந்தப்பட்டவர்கள் வந்து கேட்டால், அப்பச்சி சொல்கிற காசை கொடுத்துவிட்டு எடுத்துச் செல்ல வேண்டும். அப்படித்தான் அழகரின் (குமரன்) நண்பர் ஒருவரது வண்டி ஒன்றை திருடி, பணம் கொடுத்தால் தான் தரமுடியும் என்று சொன்ன அப்பச்சியின் ஆட்களை அடித்துbநொறுக்கி விட்டு, நண்பனின் வாகனத்தை மீட்டு கொடுத்தான் அழகர்.

நான் ஏற்கெனவே மாணிக்கம், மாயி, திவான், படங்களை கமர்ஷியலாக இயக்கி வெற்றி பெற்றிருக்கிறேன். இந்த படமும் அந்த வரிசையில் மாபெரும் வெற்றிபடமாக இருக்கும். இந்த கதைக்கு குமரன் கனகச்சிதமாக பொருந்திவிட்டார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்கிறார் இயக்குனர் சூரியபிரகாஷ்.