விஜய் சேதுபதியின் வளர்ச்சி கண்டு பெருமை அடைகிறேன் : சரண்யா பொன்வண்ணன்..!

நடிகர் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், சரண்யா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஜுங்கா’. இயக்குனர் கோகுலுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்துக்குப் பின் மீண்டும் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் விஜய் சேதுபதி தான்.

இந்தப் படத்தின் இசை சித்தார்த் விபின். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்வில் விஜய் சேதுபதி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் நடிகை சரண்யா பொன்வண்ணன் உரையாற்றினார்.

அப்போது, “நான் விஜய் சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த போது அவர், ‘எனது முகம் ரசிகர்களுக்கு பிடிக்குமாம்மா? என்னை எல்லாம் ரசிகர்கள் ரசிப்பார்களாம்மா ?’ எனக் கவலையுடன் கேட்டார். நான்,’உன் முகத்துக்கு என்னப்பா குறை நீ பெரிய ஆளாக வருவாய்’ என வாழ்த்தினேன். இப்போது அவர் தயாரிப்பாளராகி எனக்கு ஊதியம் அளித்துள்ளார்.

அவருடைய வளர்ச்சியக் கண்டு நான் பெருமை அடைகிறேன். தன்னுடைய மகனின் வளர்ச்சியக் கண்டு கர்வம் கொள்ளும் தாய் போல விஜய் சேதுபதியின் வளர்ச்சியைக் கண்டு நான் கர்வம் கொள்கிறேன். விஜய் சேதுபதி மேலும் மேலும் வளர நான் மனதார வாழ்த்துகிறேன்: என சரண்யா கூறி உள்ளார்.

Leave a Response