தனியார் பள்ளியில் படித்தவர்கள் என்ஜினீயர், டாக்டர்கள், அரசு பள்ளியில் படித்தவர்கள் அரசியல்வாதிகள்-வெளுத்து வாங்கிய அமைச்சர்..!

தனியார் பள்ளிகள் தான் தரமான கல்வியைத் தருவதாகவும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தான் என்ஜினீயர், டாக்டர்களாக ஆகிறார்கள் என்று தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அரசு பள்ளியில் பள்ளியில் படிப்பவர்கள் அரசியல்வாதி ஆகிவிடுகிறார்கள் என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசும் போது, , தனியார் பள்ளிகள் சரக்கு முறுக்கு ஆனால் அரசு பள்ளிகள் செட்டியார் முறுக்கு என்நு உவமையுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், . இதில் செட்டியார் முறுக்கா, சரக்கு முறுக்கா என்று பார்த்தால் சரக்கு முறுக்கு தான். சரக்கு உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் என்ஜினீயர், டாக்டர்களாக ஆகிறார்கள் ஆனால் சரக்கு இல்லாத அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் அரசியல்வாதிகளாக ஆகிவிடுகிறார்கள் என கூறினார்.

எந்த கடையில் சரக்கு சுத்தமாக இருக்கிறதோ அந்த கடையில் தான் எல்லோரும் கியூவில் நிற்பார்கள். அதே போல கல்வியை தரமாக கொடுப்பதால் தான் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகமாக சேர்கிறார்கள் என்று அமைச்சர் சீனிவாசன் பேசினார்.

இதனால் தனியார் பள்ளிகளை உயர்த்தி பேசி விட்டு, அரசு பள்ளிகளை அமைச்சர் ஒருவரே மட்டம்தட்டி பேசுகிறார். கல்வி தரமில்லாத, சரக்கு இல்லாதஅரசு பள்ளி மாணவர்கள் அரசியல்வாதி ஆகிவிடுகிறார்கள் என்றால் தன்னை தரமில்லாத, சரக்கு இல்லாத அரசியல்வாதி என குறிப்பிடுகிறாரா என விழாவில்கலந்து கொண்டவர்கள் குழப்பம் அடைந்தனர்.

Leave a Response