தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி மீனவர்கள் இன்று முதல் மீண்டும் கடலுக்குச் சென்றனர்.

ப்பாக்கிச்சூட்டை கண்டித்து தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மீனவர்கள் இன்று முதல் மீண்டும் கடலுக்குச் சென்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேரும், மறுநாள் சம்பவத்தில் ஒருவரும் என 13 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மீனவர்கள் கடந்த 16 நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் தற்போது நிலைமை சீரடைந்ததை தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூத்துக்குடி மீனவர்கள் இன்று முதல் மீண்டும் கடலுக்குச் சென்றனர்.

Leave a Response