இறுதி கட்டத்தை நெருங்கிய காவிரி தீர்ப்பு..!

காவிரி வரைவு வாரியத்தின் திட்டத்தை மத்திய அரசு மே 14 அன்று உச்ச நீதிமன்றத்திடம் தாக்கல் செய்தது. அதன் நகல் தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகாவுக்கு அளிக்கப்பட்டு அதன் மீது நேற்று உச்ச நீதிமன்றத்தின் விசாரணை நடைபெற்றது அதன் படி,

காவிரி ஆணையத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. அதன்படி நீர் திறக்கும் அதிகாரம் வாரியத்துக்கே இருக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது அதன்படி நடந்த விசாரணையில் நீதிபதிகள் சொல்லிய திருத்தத்தை செய்து மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட காவிரி வரைவு வாரிய திட்டத்தை தாக்கல் செய்தது.

அதன்படி காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரியதை மத்திய அரசும், பிற மாநில அரசும் ஏற்றுக்கொண்டது ஆனால் இன்று மத்திய அரசு காவிரி ஆணையம் என்றே பெயர் வைத்துள்ளது. மத்திய அரசு தன் தரப்பு வாதத்தில் வாரியத்தை விட ஆணையத்துக்கே அதிக அதிகாரம் உண்டு எனக் கூறியது.

அணையில் நீரின் அளவை வெளியிடுவதில் கர்நாடகமும் கேரளமும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆணையத்தின் முடிவே இறுதியானது என்றும் தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை ஆணையம் நாடலாம் எனக் கூறியுள்ளது.

நீர் திறக்கும் அதிகாரம் அந்தந்த மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்கிற வாதத்தை கர்நாடாக அரசு முன் வைக்க இதற்கு தமிழக அரசு இடையிட்டு ஏற்கனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு வழங்காததை குறிப்பிட்டு நீர் திறக்கும் அதிகாரத்தை காவிரி ஆணையத்துக்கே வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளது இதற்கான தீர்ப்பை நாளை வழங்குவோம் எனக்கூறி வழக்கை தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்

Leave a Response