ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மலை கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு !

விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையை அடுத்துள்ள சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சதுரகிரி மலையில் மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, கருப்பனசாமி கோயில் பாறை பகுதிகளில் நீர்வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்துள்ளது.

எனவே, அமாவாசையான நேற்று சதுரகிரிக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்த நிலையில், சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல முதலில் 500 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

சுவாமி தரிசனம் செய்துவிட்டு 500 பக்தர்களும் திரும்பும் வரை, மற்ற பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Response