எஸ்.வி.சேகர் தலைமறைவு? போலீஸ் தீவிரமாக தேடுகிறது..!

நடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை தீவிரமாகத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சார்பில் சென்னை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவாகி விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை பல இடங்களில் தேடி வருவதாகவும் சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர். அவரை கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வைக்க சிலர் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Response