காவிரி மேலாண்மை விவகாரத்தில் கர்நாடகத் தேர்தலை மையமாக வைத்தே மத்திய அரசு செயல்படுகிறது-நக்மா குற்றசாட்டு..

காவிரி மேலாண்மை விவகாரத்தில் கர்நாடகத் தேர்தலை மையமாக வைத்தே மத்திய அரசு செயல்படுகிறது” என அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நடிகையுமான நக்மா குற்றம்சாட்டியுள்ளார்.

5 நாள் பயணமாக மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்திப்பதற்காக அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நடிகையுமான நக்மா நேற்றிரவு புதுச்சேரி வந்தார். இன்று காலை சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்த அவர் பொதுப்பணித்துறை அமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயத்தைச் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் கட்சி விவகாரங்கள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் உள்ளிட்டவை குறித்து பேசினார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு எவ்வளவு அழுத்தம் தரமுடியுமோ அவ்வளவு அழுத்தத்தைக் காங்கிரஸ் கட்சி கொடுத்து வருகிறது. ஆனால், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எவ்வித மதிப்பையும் அளிக்காத மத்திய அரசு, கர்நாடகத் தேர்தலை மையமாக வைத்தே காவிரி மேலாண்மை விவகாரத்தில் செயல்படுகின்றது” என்று குற்றம்சாட்டினார்.

Leave a Response