ரஜினிக்கு பக்கபலமாய் பாஜக உள்ளது-ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகம் வரும் பிரதமருக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கருப்புக்கொடி காட்டும் என தெரிவித்தார்.

தலித் மக்களுக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அநீதி இழைக்கின்றன என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டினார். தலித் மக்களுக்கு காங்கிரஸ் மட்டும்தான் பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ரஜினிக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பக்கபலமாய் இருப்பதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். ஏற்கனவே ரஜினிக்கு பின்னால் பாஜக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response