தமிழகத்தில் ஏன் போராட்டம்? சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேள்வி

புதுடில்லி: காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் ஏன் போராட்டம் நடக்கிறது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார். தொடர் போராட்டம் காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுதும் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி, வழக்கு ஒன்று தொடர்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு ஆஜரானார்.

உரிய உத்தரவு அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், தமிழகத்தின் என்னதான் நடக்கிறது. ஏன் அனைத்து இடங்களிலும் போராட்டம் நடக்கிறது. மக்களும் தமிழக கட்சிகளும் போராட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பவும், அமைதியை நிலைநாட்ட வேண்டும். வரும் 9ம் தேதி காவிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும். அன்றைய தினம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் பெற்று தரப்படும் என தெரிவித்தார்.

அப்போது தமிழக வழக்கறிஞர் உமாபதி கூறுகையில், சுப்ரீம் கோர்ட் கருத்துகளை தமிழக அரசிடம் தெரிவித்து சட்டம் ஒழுங்கை காப்பதற்கானநடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Leave a Response