ஸ்டெர்லைட் ஆலை ; கரும்புகை : வேதனையில் மக்கள் !

தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு அபாயகாரமான நோய்கள் பரவுகிறது.

நிலத்தடி நீர் மற்றும் காற்றில் மாசு ஏற்பட்டு வருவதால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக,தமிழகம் முழுவதும் ஆங்காங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர் மக்கள்.

இந்த போராட்டத்தில்,மாணவர்களும் அதிக அளவில் ஈடுபாடு காண்பிக்கின்றனர்.

இதற்கு முன்னதாக,ஜல்லிகட்டுக்கு ஆதராவாக ஒன்று கூடி போராடிய இளைஞர்கள் தற்போது,ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உறுதியாக போராடி வருகின்றனர்

இந்நிலையில்,இரவுநேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியில் வரும் கரும்புகை மக்களை மேலும் வேதனை கொள்ள செய்துள்ளது.

மேலும்,இதன் காரணமாக தோல் நோய், புற்றுநோய் மற்றும் காற்று மாசுபடும் என மக்கள் மிகவும் அஞ்சுகின்றனர்

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் புகை சூழ்ந்த படலத்தை புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது

இந்த இரண்டு புகைப்படத்தையும் பார்த்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response