தற்போது தமிழ்திரை உலகின் தலையாய பிரச்சினை கதாநாயகி தேர்வுதான். அழகான, திறமையான புதுமுக நடிகைகள் இல்லை என்ற குறைபாடு. எங்கேயும் எப்போதும் விவாதிக்கபடுகிறது. நடிக்க வருவோரும் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் கவரும் வகையில் தங்களை சரிவர தயார்படுத்திக் கொள்வதில்லை என குறையும் உண்டு.
ஒரு நல்ல வீடியோ ஆல்பம் மூலம் தங்களை இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் அறிமுகம் செய்து கொள்ளும் இந்த யுத்தி, இவர் கதைக்கு பொருத்தமாக இருப்பாரா, முகஜாடை ஒத்து போகுமா, நடிப்பு வருமா, நடனம் வருமா என்ற அடிப்படை தேர்வுக்கு உதவும். இந்த யுத்தியை கையாண்டு இருக்கிறார் ‘அனைகா’. ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் இரு மொழியில் தயாராகும் ‘நான்தாண்டா’ படத்தில் அறிமுகமாகும் இவருடைய புதிய video ஆல்பம், சுட்டெரிக்கும் கோடை காலத்தில் குளிர்ச்சி ஊட்டும்!
கூடுதல் தகவல்: வசந்தபாலன் இயக்கத்தில் Y Not Studios சார்பில் சசிகாந்த் தயாரிக்கும், சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும், A.R.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் புதிய படத்தின் நாயகி அனைகா தான்!!! நல்ல புத்திசாலிதனமான அணுகுமுறை மூலம் அவருக்கு இந்தப் பொன்னான வாய்ப்பு கிட்டி உள்ளது.