விரைவில் வெப் சீரியலில் நகுளின் நாயகி !

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுனைனா.

அதை தொடர்ந்து “வம்சம்”, “சமர்” என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இருந்தாலும் சுனைனா நினைத்தபடி முன்னணி நடிகையாக வரமுடியவில்லை.

விரைவில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் “காளி” படம் தனக்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்கும் என நம்பிக்கையுடன் உள்ளார் சுனைனா. அதை தவிர, தனுஷின் “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்திலும் சுனைனா நடித்துள்ளார்.

 இந்நிலையில் அடுத்ததடுத்து பட வாய்ப்புகள் வராத காரணத்தால், ஜே.எஸ்.நந்தினியின் வெப் சீரீஸில் சுனைனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Leave a Response