முத்து நகரை மூச்சுத் திணறும் நகரக மாற்ற வேண்டாம் ! நடிகர் விவேக்கின் ட்வீட் !

ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு கருணை மனம் கொண்டு செயல்படவேண்டும் என நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட கொடூர நோய்கள் உருவாவதாகவும் குடிநீர் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் 43வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் நடிகர் விவேக் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஸ்டெர்லைட் பற்றி படிக்கப் படிக்க அதிர்ச்சியாக உள்ளது.

எவ்வளவு உயிர் கொல்லி நச்சுக் கழிவுகள் மண்ணிலும் நீரிலும் காற்றிலும் இதுவரை கலந்தனவோ தெரியவில்லையே? அரசு கருணை மனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மன்றாடி கேட்கிறேன். அது முத்து நகர்; மூச்சுத் திணறும் நகர் அல்ல! இவ்வாறு விவேக் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

Leave a Response