பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படம்…

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் இந்தியத் திரையுலகத்தில் மிகப் பெரும் வசூல் சாதனையைப் புரிந்தவர் இயக்குனர் ராஜமௌலி.

“இந்தி” திரைப்படங்கள் மட்டும்தான் பெரிய அளவில் வசூலிக்க முடியும் என்றிருந்ததை முறியடித்து ஒரு தெலுங்குப் படத்தாலும் அப்படி ஒரு சாதனையைச் செய்ய முடியும் என்று திரையுலகங்களுக்குப் புரிய வைத்தார்.

‘பாகுபலி 2’ படம் வெளிவந்து எட்டு மாதங்களுக்கு ஆன பின்னும் அவர் தன்னுடைய அடுத்த படத்தை ஆரம்பிக்காமல் இருந்தார். அனால் தற்போது “ஜுனியர் என் டி ஆர்” மற்றும் “ராம் சரண்” ஆகிய முன்னணி நடிகர்களை வைத்து தனது புதிய படத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

ஹீரோக்கள் சம்பளம் இல்லாமல் சுமார் 90 கோடி வரை ராஜமௌலி பட்ஜெட் கொடுத்திருப்பதாகவும்   செய்திகள் வெளியாகியுள்ளன.

வரும் அக்டோபர் மாதம்  படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள்…

Leave a Response