பாகுபலியிடம் திறமையை நிரூபிப்பேன் சவால் விடும் முகமுடி நாயகி !

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில்  பாகுபலி படத்துக்கு பிறகு ஹீரோ பிரபாஸ் ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்துக்காக ஹேர் ஸ்டைல் கெட் அப் மாற்றியதுடன், உடல் எடையை லேசாகவே குறைத்திருந்தார். சில தினங்களுக்குமுன் பிரபாஸின் புதிய தோற்ற ஸ்டில் வெளியானது. அதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாகுபலியில் பாடிபில்டர்போல் தோற்றம் அளித்த பிரபாஸ் தற்போது ஒல்லியாக மாறியிருந்ததே அதிர்ச்சிக்கு காரணம்.

அடுத்து அவர் நடிக்கும் புதிய படத்திற்காக ஒல்லி தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் ஏற்கனவே முகமூடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பிரபாஸ் ஜோடியாக பூஜா நடிப்பதுபற்றி உறுதி செய்யப்படாத தகவல்கள் வந்த நிலையில் தற்போது அவரே தனது தரப்பில் அதை உறுதி செய்திருக்கிறார்.

அவர் கூறும்போது:-

“இயக்குனர் ராதாகிருஷ்ணகுமார் சமீபத்தில் என்னை அணுகி கதை கூறினார். முற்றிலும் பொழுதுபோக்கு அம்சமுள்ளதாக இருந்தது. பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். பாகுபலி மூலம் பிரபாஸ் தனது நடிப்பு திறமையை நிரூபித்துவிட்டார். தற்போது இது எனக்கு கிடைத்த வாய்ப்பு. என் திறமையை நிச்சயம் நிரூபிப்பேன்’ என சவால் விட்டிருக்கிறார் பூஜா.

Leave a Response