ஆவேசமாக பேசிய – நடிகர் சிம்பு..!

 

தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து இயக்குநர்கள் சங்கத்துடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், யாரும் எதிர்பாராத விதமாக சிம்பு கலந்து கொண்டார். இயக்குநர்கள் சங்கத்தில் அவர் உறுப்பினர் என்பதால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய சிம்பு, “தமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான். கடவுள் புண்ணியத்தில் அதில் நானும் ஒருவன். அவர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் மட்டும் ஒன்றும் ஆகிவிடாது.

நீங்கள் ஏன் கறுப்பு பணத்தில் சினிமா எடுக்கிறீர்கள்? அனைத்தையும் வெள்ளையில் கொடுத்து, ஒழுங்காக வரிகட்டி கணக்கு காட்டுங்கள். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது அந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோவுக்குத் தெரிய வேண்டும். கறுப்புப் பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும்” என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

நடிகர்கள் அதிகம் சம்பளம் கேட்பதால் தான் பட்ஜெட் அதிகமாகிறது என்று திருப்பூர் சுப்ரமணியன் மற்றும் சில தயாரிப்பாளர்கள் கூறிவந்த நிலையில், சிம்புவின் இந்தப் பதில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response