ஊருக்குள் சிறுத்தைப்புலி : பீதியில் தானே மக்கள் !

cheeta

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த உல்லாஸ்நகரில் சிறுத்தைப்புலி நுழைந்ததால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது:-

உல்லாஸ் நகர் முகாம் எண். 5 ல் உள்ள ஒரு பங்களாவில் சிறுத்தைப்புலி ஒன்று நுழைந்துள்ளது. இதை சிசிடிவி கேமரா வழியாகப் பார்த்ததாக ஒரு பாதுகாவலர் தெரிவித்தார்.

பங்களாவாசிகளுக்கு பாதுகாவலர் எச்சரிக்கை செய்தார். ஆனால் இச்சிறுத்தைப் புலி சில நேரம் கழித்து மற்றொரு இடத்திற்கு மாறிவிட்டது.

இப்பகுதியில் சிறுத்தைப்புலி நுழைந்துள்ளதால் மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளும்படி வனத்துறை எச்சரிக்கை விடுத்ததையொட்டி அப்பகுதி மக்கள் அச்சத்தில் வெளியே வரமுடியாமல் தங்கள் வீட்டுக் கதவுகளை உள்ளுக்குள் தாழிட்டுக்கொண்டனர்.

அப்பொழுது வந்த வனத்துறையின் மீட்புக்குழு நகருக்குள் நுழைந்தது. நான்கு மணி போராட்டத்திற்குப் பிறகு சிறுத்தைப் புலி பதுங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து அதை மீட்டது.

பின்னர் சிறுத்தைப்புலி சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் கொண்டுபோய் விடப்பட்டது. சிறுத்தைப்புலி மீட்டுச்சென்ற பிறகு,, வீட்டுக்குள் பூட்டிக்கிடந்த மக்கள் வெளியே வந்தனர். எனினும், சிறுத்தைப்புலி வந்துசென்ற அச்சத்திலிருந்து விடுபட முடியாமல் மக்கள் இருந்ததால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Leave a Response