செல்போன் வெடித்து சிறுவன் படுகாயம்..

mobile-blast

திருப்பூரில் செல்போன் வெடித்து பால்ராஜ் என்ற 9 வகுப்பு மாணவன் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள மூலனூரைச் சேர்ந்தவன் பால்ராஜ். இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். பால்ராஜ் அடிக்கடி செல்போனில் பாடல் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று வழக்கம் போல் பால்ராஜ் செல்போனில் பாட்டுக் கேட்டு விட்டு தனது கால்சட்டை பையில் வைத்துள்ளார். ஏற்கனவே சூடாக இருந்த மொபைல், திடீரென்று வெடித்துச் சிதறியது. இதில் படுகாயம் அடைந்த பால்ராஜ் அலறி துடித்தார்.

இதையடுத்து உடனடியாக பால்ராஜ் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது

Leave a Response