இயக்குனர் “விக்னேஷ் சிவனுக்கு” சிறப்பு பரிசை அளித்த “சூர்யா”…

1

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் வெற்றி பெற்றதால், படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சிறப்பு பரிசை சூர்யா அளித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். கார்த்திக், செந்தில், தம்பிராமையா, ஆர்ஜே பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் சூர்யா சிறப்பு பரிசை அளித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனை அழைத்து சிகப்பு வண்ண டொயோட்டா காரை பரிசளித்திருக்கிறார்.

Leave a Response