தமிழ்நாட்டில் “விவசாயமும் சினிமாவும் இறந்து கொண்டிருக்கின்றது” – நடிகர் விவேக்…

 

vivke_1(1)

இன்று முதல் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் விவசாயமும் சினிமாவும் இறந்து கொண்டிருப்பதாக நடிகர் விவேக் ட்வீட் செய்துள்ளார்.

“தமிழ்நாட்டில் இறந்து கொண்டிருக்கும் 2 விஷயங்கள். 1.விவசாயம், 2.சினிமா. அதை அழிப்பது வறண்ட நீர்நிலை, காணாமல் போன ஆறுகள், மரங்கள், மீத்தேன் போன்ற திட்டங்கள். இதை அழிப்பது வரைமுறையற்ற வெளியீடு, FDFS இணைய விமர்சனங்கள், கட்டண உயர்வு, சம்பள உயர்வு. அரசு தலையிடாமல் தீர்வு இல்லை” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விவேக்.

Leave a Response