ஜனாதிபதி, மாநில கவர்னர்களுக்கு 3 மடங்கு ஊதிய உயர்வு.. மக்களுக்கு கிடையாது: மத்திய பட்ஜெட்

arun jaitley rv moorthy

ஜனாதிபதியின் தற்போதைய மாத ஊதியம் ரூ.1.50 லட்சமாக உள்ளது, இது ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். துணை ஜனாதிபதியின் மாத ஊதியம் தற்போது ரூ.1.25 லட்சமாக உள்ளது, இது ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். மாநில கவர்னர்களின் மாத ஊதியம் தற்போது ரூ.1.10 லட்சமாக உள்ளது. இது, ரூ.3.50 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய நிலையே தொடரும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க குழு ஏற்படுத்தப்படும். விலைவாசி உயர்வு உள்பட பல அம்சங்களுக்கு ஏற்ப ஊதியம் மாற்றி அறிவிக்கப்படும்.

தனிநபர் வருமானவரி வருவாய் 12.6% அதிகரித்துள்ளது. தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும். வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், எதிர்பார்த்த அளவுக்கு வரி வசூல் ஆகவில்லை என்பதால் உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டுவரப்படும்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்களின் ஊதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதோடு, எம்.பி.க்களின் ஊதியம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-19-ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி மக்களவையில் இன்று இவ்வாறு தாக்கல் செய்தார்.

Leave a Response