‘வர்மா’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்

varma vikram son

தெலுங்கில் வெளிவந்து கடந்த வருடம் பெரிய வெற்றி பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. அப்படத்தின் தமிழ் ரீமேக் ‘வர்மா’ என்ற பெயரில் உருவாக உள்ளது. நடிகர் விக்ரமின் மகன் துருவ், இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இதுவரை ரீமேக் படங்களையே இயக்காத பாலா, விக்ரம் கேட்டுக் கொண்டதால் ‘வர்மா’ படத்தை இயக்கித் தர சம்மதித்துள்ளார்.’வர்மா’ படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த நவம்பர் மாதமே வெளியிடப்பட்டது. படத்திற்காகப் பொருத்தமான நாயகியைத் தேடி வருவதாகவும் கூறியிருந்தார்கள். படத்தின் நாயகி யார் என்பதை முடிவு செய்துவிட்டார்களாம், ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது வெளியிடலாம் என முடிவெடுத்துள்ளார்களாம். தற்போது படத்தின் கதாநாயகன் துருவ் படத்தில் அணிய உள்ள ஆடைகளைத் தேர்வு செய்ய விக்ரம் அவருடைய மகனுடன் வெளிநாடு பறந்துள்ளாராம்.பாலா தற்போது இயக்கி வரும் ‘நாச்சியார்’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த மாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் ‘வர்மா’ படப்பிடிப்பை பாலா ஆரம்பித்துவிடுவார் என்கிறார்கள்.

Leave a Response