மீண்டும் துவங்கப்படவுள்ளது “துருவ நட்சத்திரம்” படப்பிடிப்பு..!

கவுதம் மேனன் எப்போதோ எழுதிய கதை துருவ நட்சத்திரம். இப்படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், சில நாட்கள் காத்திருந்த சூர்யா, இப்படத்தின் கதையை கவுதம் மேனன் தன்னிடம் இதுவரை கூறவில்லை. எனவே, இப்படத்தில் இருந்து விலகுகிறேன் என அறிக்கை வெளியிட்டு விட்டு ஒதுங்கி விட்டார்.

அதன்பின், சில வருடங்களுக்கு பின் விக்ரமை வைத்து இப்படத்தை இயக்கினார் கௌதம் மேனன். இப்படத்தில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்தனர். படத்தின் டீசரும் வெளியிடப்படது. கவுதம் மேனனே இப்படத்தை தயாரித்தார்.

ஆனால், பல நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், போதிய பணமில்லாமல் இப்படம் கைவிடப்பட்டது. விக்ரமும் இருமுகன், ஸ்ட்கெட்ச், சாமி 2 என வேறு படங்களில் நடிக்க சென்றுவிட்டார். அந்த படங்கள் வெளியாகிவிட்ட நிலையில் துருவ நட்சத்திரம் அப்படியே இருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தை தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. எனவே, விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கப்படவுள்ளது.

Leave a Response