வித்யாபாலன் மறுத்த வேடம் மஞ்சுவாரியர் ஏற்பு

Manju Warrier's next titled as Udhaharanam Sujatha
Manju Warrier’s next titled as Udhaharanam Sujatha

சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் நடித்த வித்யாபாலன் பின்னர் கஹானி உள்ளிட்ட சில படங்களில் கனமான வேடங்கள் ஏற்று நடித்தார். இந்நிலையில் அவரை மலையாளத்தில் பிரபல எழுத்தாளர் மாதவிகுட்டி வாழ்க்கை படமான ‘ஆமி’யில் நடிக்க இயக்குனர் கமல் ஒப்பந்தம் செய்தார். மேக்அப் டெஸ்ட் எல்லாம் எடுத்து ஓ.கே ஆன நிலையில் திடீரென்று படத்தில் நடிக்க மறுத்து விலகினார் வித்யாபாலன். அவருக்கு பதிலாக மஞ்சுவாரியரை இயக்குனர் தேர்வு செய்தார். வித்யாபாலன் விலகி பல மாதங்கள் ஆகியிருந்தாலும் அதற்கான சரியான காரணம் வெளிவரவில்லை. வித்யா விலகியதுபற்றி இயக்குனர் கமலிடம் கேட்டபோது,’வித்யாபாலன் இப்படத்திலிருந்து விலகியது எனக்கு சந்தோஷம்தான். அவர் நடித்திருந்தால் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு கவர்ச்சியான தோற்றம்தான் கிடைக்கும். ஆனால் மாதவிகுட்டி அப்படிப்பட்டவர் அல்ல. தற்போது குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க மஞ்சுவாரியர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதனால் ஏற்கனவே மாதவிகுட்டி பற்றி எண்ணியிருந்ததைவிட தற்போது மேலும் சிறப்பாக காட்சிகளை என்னால் உருவாக்க முடியும்’ என்றார்.

Leave a Response