பேசப்படாத கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படம் வெற்றிபெற்றாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெரிதாக பேசும் படி இல்லை.

kearthisurash with suriya

விமர்சனங்களில் கூட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கம், சூரியாவின் நடிப்பு மற்றும் அனிருத்தின் இசைக்கு கிடைத்த பாராட்டுகள் போன்று இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பிற்கு போதிய பாராட்டு கிடைக்கவில்லை என வருத்தத்தில் உள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.

இருப்பினும் கீர்த்தி தற்போது சாமி 2, சண்டக்கோழி 2 , சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு… மற்றும் விஜயுடன் நடித்து வரும் பெயரிடப்படாத திரைப்படம் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

கீர்த்தி சுரேஷ் பெரிய நடிகர்களுடன் நடித்தால் போதும், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் பரவாயில்லை என்று நினைப்பதால் தான் இவருக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Response