ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவருக்கு, அமெரிக்காவில் மரண தண்டனை, பென்சில்வேனியா நீதிமன்றம் தீர்ப்பு.

543a24351d12c.image

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டாமுரி,32 வயதான இவர் பென்சில்வேனியா மாகாணத்தில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். ரகுநந்தன் ஹெச்1பி விசாவில் அமெரிக்கா சென்றுள்ளார்.அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த ரகுநந்தன் யண்டாமுரி என்ற சாஃப்ட்வேர் என்ஜினியர் அருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி மற்றும் அவருடைய 10 மாத பேத்தியை கடத்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ரகுநந்தன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது.ந்நிலையில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி ரகுநந்தனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என பென்சில்வேனியா நீதிமன்றம் நாள் குறித்துள்ளது.அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் முதல் இந்தியர் ரகுநந்தன் ஆவர்.பென்சில்வேனியா கவர்னர், மரண தண்டனையை நிறைவேற்ற,2015 முதல்,தற்காலிகத் தடை விதித்திருந்தார்.இதன் அடிப்படையில், ரகுநந்தனின் தண்டணை நிறுத்தி வைக்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response