பொங்கலுக்கு போடப்பட்ட ஸ்கெட்ச்….

Sketch
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ஸ்கெட்ச்”.

இப்படத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தில் பிரியங்கா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கபிலன், விவேக் மற்றும் விஜய்சந்தர் ஆகியோர் பாடல்கள் எழுத, எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சுகுமார் கையாள, ரூபன் தேவையற்ற காட்சிகளை கத்திரிக்கும் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பிருந்தா, தஸ்தாகீர் ஆகியோர் நடனத்தை இயக்க, சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன் சண்டைகாட்சிகளை இயக்கியுள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜய்சந்தர் இயக்க, இப்படத்தினை மூவிங் பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் 2018 ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Leave a Response