தேர்தல் வெற்றியால் பா.ஜ.க உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உற்சாகம்!

paralumanram

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், நிலுவையில் உள்ள சில மசோதாக்களையும் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

கூட்டம் தொடங்கிய அன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட பின்னர், அவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

மாநிலங்களவை தொடங்கியதும் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் மன்மோகன் சிங் சந்தித்தாக கூறப்பட்டது குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், சபாநாயகர் வெங்கையா நாயுடு அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால், கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து, பேசிய அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன், ஒக்கி புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

bjp-cong-flagஅப்போது, சரத்யாதவ் தகுதி நீக்கம் தொடர்பாக சில உறுப்பினர்களும் பேச முயற்சித்ததால் மீண்டும் குழப்பம் நிலவியது. இதனையடுத்து, அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் அறிவித்தார். இந்நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் அவை கூடியது.

rajnath-singh53-60

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பா.ஜ.க உறுப்பினர்கள் உற்சாகமாக காணப்பட்டனர். பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி காரிலிருந்து இறங்கி இரு விரல்களை அசைத்து வெற்றி சின்னத்தை காண்பித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், “இரு மாநிலங்களுடல் பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ.க ஆட்சியமைக்கும்” என்றார்.

Leave a Response