கோடையில் ஒரு குளுகுளு பயணம் – EPIC 3D!!

3D அனிமேஷனில் ஐஸ் ஏஜ், ரியோ, மடகாஸ்கர், குங் பூ பாண்டா என வெளிவந்த அனைத்து படங்களுமே வெற்றிதான். இதில் ஆச்சர்யமான விஷயம் என்று சொன்னால் குழந்தைகளை குறி வைத்து எடுக்கப்பட்ட இவை வயது வித்தியாசமின்றி அனைவராலும் ரசிக்கப்பட்டது தான். சமீபத்தில் கூட CROODS என்ற அனிமேஷன் படம் கலக்கி கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் கோடை விடுமுறையை மேலும் குதுக்கலாமாக்க வருகிறது EPIC 3D.

பிரபல நாவலாசிரியரான “William joyce” எழுதிய “The leaf men and the Brave good bugs” என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட நகைச்சுவை மிகுந்த அனிமேஷன் படம் தான் இந்த EPIC 3D. 2002-ல் ICE AGE, 2005- ல் ROBOTS போன்ற அனிமேஷன் படங்களை உருவாக்கிய Chris Wedge இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Collin farrel, Josh Hutcherson, Amada,Aziz, Pitbull, Christoph Walts போன்ற பிரபலங்கள் குரல் கொடுத்துள்ள இந்த படம் அமெரிக்கா உட்பட உலகெங்கும் மே 24-ல் வெளியாகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் ஒரு வாரம் முன்னதாகவே அதாவது மே 17-ல் வெளியாகிறது. Danny Elfman-ன் இசையும், Renota Falcoa-ன் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.

ஆராய்ச்சியாளரான நாயகியின் தந்தை, காட்டுக்குள் சென்று வீடு திரும்பாததால் தந்தையை தேடி காட்டுக்குள் செல்லும் மகளின் கதை. காட்டில் ஒரு இலையை தொடுவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவள் எப்படி மீண்டாள் என்பதை ரசிக்கும் விதத்தில் கொடுத்துள்ளனர். FOX STAR STUDIOS நிறுவனம் இதனை தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். ஆக கோடையில் ஒரு இதமான குளுகுளு பயணத்திற்கு தயாராகலாமே..