வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் சில இடங்களில் மழை வாய்ப்பு!

rainjpg

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ”குமரிக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மாலத்தீவு மற்றும் லட்சத்தீவை ஒட்டிய பகுதியில் நிலவுகிறது. அதன் தாக்கத்தால் தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பில்லை.

மேலும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Response